Published : 24 Apr 2014 09:15 AM
Last Updated : 24 Apr 2014 09:15 AM

60 ஆண்டுகளில் நேரு குடும்பம் மட்டுமே வளர்ந்திருக்கிறது: பிரியங்காவுக்கு மோடி பதிலடி

கடந்த 60 ஆண்டுகளில் உங்கள் (நேரு) குடும்பம் மட்டுமே வளர்ந்திருக்கிறது. ஆனால், இப்போதைய பிரச்சினை தேசத்தை வலிமையாக்குவதுதான் என்று பிரியங்காவுக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

எங்கள் குடும்பத்தை குறி வைத்து பாஜக தாக்குகிறது. இதனால் நாங்கள் மேலும் பலப் படுவோம் என்று பிரியங்கா தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக, குஜராத்தின் கலோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நீங்கள் மேலும் பலமடைவீர்கள் என்று சொன்னீர்கள். கடந்த 60 ஆண்டுக ளாக உங்கள் குடும்பம் (நேரு குடும்பம்) மட்டுமே வளர்ந் துள்ளது. ஆனால், இன்றைய பிரச்சினை தேசத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதுதான்.

நீங்கள் (பிரியங்கா) உங்களை வலுப்படுத்திக் கொள்ள நினைக் கையில், பாஜக வலுவான தேசத் தைக் கட்டமைக்க விரும்புகி றது. எங்களைப் பொருத்த வரையில் மக்களின் குரலை விட வலிமையானது வேறெது வும் இல்லை. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக காங்கிரஸ் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

பாஜக கேள்வியெழுப்பும் போதெல்லாம், என் மீது மேலும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. அவை பயனற்றுப் போகும் போது, காங்கிரஸ் தலைவர்கள் சிபிஐ-யைத் தவறாகப் பயன்படுத்தும் பிரச்சினையைக் கொண்டு வருகின்றனர். பிரச்சினை அடிப் படையிலான போராட்டத்தை முன் வைக்கமுடியாமல் காங்கிரஸார் பின்தங்கி விட்டதாக நினைக்கி றேன்.

தாயும் மகனும் (ராகுல்-சோனியா) சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கின்றனர். அந்தக் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தி விட்டனர். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கா ததற்காக, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டித்துள்ளது. மத்திய அரசு மக்களிடமிருந்து எதையோ மறைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x