Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

சர்ச்சை பேச்சு: அமித் ஷா மீது வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா மீது பிஜ்னோர் மாவட்ட நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, “இந்த தேர்தலில்தான் நமது கவுரவம் அடங்கியுள்ளது. நமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்த்துக்கொள்ளும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது. அநீதியை இழைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்து, முஸ்லிம் மக்களிடையே பலமுறை கலவரம் ஏற்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில், அமித் ஷா இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய அமித் ஷாவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸை பழிவாங்க வேண்டும் என்ற கருத்தைத்தான் மோடி தெரிவித்தார் என்றும், குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக அவர் எதையும் தெரிவிக்கவில்லை என்று பாஜக கூறியுள்ளது.

சி.டி. ஆதாரம் அனுப்பிவைப்பு

இந்நிலையில், அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சி.டி.யையும், அந்த சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையையும் புது டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு மாநில தலைமைத் தேர்தல் அலுவ லர் அனுப்பிவைத்துள்ளார்.

வழக்குப் பதிவு

அமத் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய பிஜ்னோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடவடிக்கை எடுக்கப் பட்டது. இது குறித்து மாநில தலைமை தேர்தல் அலுவலர் உமேஷ் சின்ஹா கூறியதாவது:

அமித் ஷா மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 (கலவரத்துக்கு மக்களை தூண்டுதல்), மக்கள் பிரதிநிதித்து வச் சட்டப் பிரிவு 125 (வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதலை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x