Published : 01 May 2014 01:19 PM
Last Updated : 01 May 2014 01:19 PM

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி அதிக இடங்களை பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

கிருஷ்ணகிரி முன்னாள் காங் கிரஸ் எம்.பி நரசிம்மன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜக வில் இணையும் நிகழ்ச்சி சென்னை யில் புதன்கிழமை நடந்தது. கமலால யத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணைத் தலைவர் சுப்பிரமணி, சேலம் மாநகராட்சி யின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பூவராகவன், திரு வண்ணாமலை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அப்போது பொன்.ராதாகிருஷ் ணன் நிருபர்களிடம் கூறியது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிபெறும். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவு மத்தியிலும் மாநிலத்தி லும் ஆட்சி செய்கிற கட்சிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய உதவியாக இருந்தது. இருந்தாலும், தமிழக வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டி ருக்க மாட்டார்கள் என்று நம்புகி றோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நிருபர்களின் கேள் விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு :

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது பற்றி புகார் அளித்த தற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லையே?

ஆளுங்கட்சியினர் பணம் பட்டு வாடா செய்ததை தேர்தல் ஆணை யம் கண்டுகொள்ளவில்லை. தேர்தலுக்கு 4,5 நாட்கள் முன்ன தாகவே வாகன சோதனைகள் கூட நிறுத்திக் கொள்ளப்பட்டது.

தே.ஜ.கூட்டணி தமிழகத்தில் எத்தனை இடங்களை பிடிக்கும்?

எவ்வளவு இடங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் முதல்நிலை கூட்டணியாக வெற்றி பெறுவோம்.

காங்கிரஸ் 3-வது அணிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பாஜக ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மூன்றாவது அணி, நான்காவது அணி மட்டு மல்ல… பங்களாதேஷ், பாகிஸ் தானுக்கு கூட காங்கிரஸ் ஆதர வளிக்க கூடும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x