Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

ராமர் கோயில் பற்றிய பாஜக அறிவிப்பு: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதே நாளில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் மூத்த தலைவர் மோதிலால் வோரா, தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: “முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி விதிமுறை மீறலாகும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை மீறி பாஜக இவ்வாறு நடந்து கொண்டுள்ளது.

அந்த அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மதச்சார்பற்றத் தன்மைக்கு எதிரானதாகும்.

மதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸின் முரண்பாடான நிலை

தேர்தல் ஆணைய புதிய விதிமுறை யின்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடப் படுவதற்கு முன்பாகவே தங்களின் தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சி களும் வெளியிட வேண்டும். ஆனால், 16-வது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. காங் கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை மார்ச் 26-ம் தேதி வெளியிட்டது.

தலைவர்கள் கருத்து

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மார்க் சிஸ்ட பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், “பாஜகவின் செயல் திட்டங்களில் இந்துத்துவக் கொள்கை முன்னணியில் இருப்பதை இந்த தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “மோடியை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், “பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்.சின் செயல் திட்டம் இடம்பெற்றுள்ளது. பொரு ளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை பாஜகவிற்கும், காங்கி ரஸுக்கும் வேறுபாடு இல்லை” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “காங்கிரஸை போன்று பாஜகவும் கண் துடைப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது” என்றார். உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: “விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு எதுவும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் தொடர்பாகத்தான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “மதவாதம், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை பாஜக கடைப்பிடித்து வருகிறது. அக்கட்சி முன்வைக்கும் வளர்ச்சித் திட்டம் தொடர்பான கோஷம், வெறும் ஏமாற்று வேலை” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x