Published : 15 Apr 2014 09:30 AM
Last Updated : 15 Apr 2014 09:30 AM

கல்விக் கடன் வட்டி ரத்து திட்டத்தை நிறுத்த உத்தரவு

கல்விக் கடன் வட்டி ரத்து திட்டத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2009 மார்ச் மாதத்துக்கு முன்பு கல்விக் கடன் பெற்றவர்களின் வட்டி ரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

இதன்படி ரூ.2600 கோடி வட்டித் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.2600 கோடி நிதி கனரா வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் கல்விக் கடன் வட்டி ரத்து திட்டத்தின் மூலம் ஆளும் கட்சி ஆதாயம் பெற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.

இதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், கல்விக் கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடியும்வரை இதுதொடர்பாக எவ்வித விளம்பரமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆணையம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

கடந்த 7-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் மே 12 வரை நடைபெறுகிறது. மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதுவரை கல்விக் கடன் ரத்து திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது. அதன்பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x