Published : 08 Apr 2014 10:37 AM
Last Updated : 08 Apr 2014 10:37 AM

ஆலந்தூரில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு: தேமுதிக வேட்பாளர் மனு நிறுத்திவைப்பு

இடைத்தேர்தல் நடக்கும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட 18 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் மனு, சொத்துப் பட்டியல் ஆட்சேபனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 29-ம் தேதி தொடங்கி, கடந்த 5-ம் தேதி முடிவடைந்தது. அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக் கள் மீதான பரிசீலனை திங்கள் கிழமை நடந்தது. இதில், வி.என்.பி.வெங்கட்ராமன் (அதிமுக), ஆர்.எஸ்.பாரதி (திமுக), நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் (காங்கிரஸ்), எழுத்தாளர் ஞாநி சங்கரன் (ஆம் ஆத்மி) உள்பட 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜின் மனுவில், அவரது மனைவியின் சொத்து விவரம் மறைக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி, ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, தேமுதிக வேட் பாளரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட் சேபனை குறித்து பதில் அளிக்க அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மனு மீது இன்று (செவ் வாய்க்கிழமை) முடிவு எடுக்கப் படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சிக்கல் என்ன?

ஆலந்தூர் தேமுதிக வேட் பாளர் காமராஜ், 2011-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் 138-வது வார்டில் போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவருடைய மனைவி வருமான வரி கட்டவில்லை, பான் நம்பர் இல்லை, அவரது பெயரில் சொத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது மனைவி வருமான வரி கட்டுகிறார். பான் எண் இருக்கிறது, 2010-ம் ஆண்டு சொத்து வாங்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார். 2010-ம் ஆண்டே சொத்து வாங்கி யிருந்தால் 2011-ம் ஆண்டு தேர்த லின்போது தேர்தலின் ஆணையத் திடம் உண்மை விவரங் களை மறைத்துள்ளார் என ஞாநி கூறியதால் வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காமராஜுக்கு மாற்று வேட் பாளரான வெங்கட்ரமண னின் மனு ஏற்கப்பட்டுள்ளது. காமராஜ் மனு நிராகரிக்கப்பட் டால், தேமுதிக வேட்பாள ராக வெங்கட்ரமணன் அறிவிக்கப் படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x