பொது ‘டெட்​’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது எப்போது? - பிஎட்​ பட்டதாரிகள்​ காத்திருப்பு

பொது ‘டெட்​’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது எப்போது? - பிஎட்​ பட்டதாரிகள்​ காத்திருப்பு
Updated on
1 min read

சென்​னை: பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் எப்​போது வெளி​யிடும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​களும் பிஎட் பட்​ட​தா​ரி​களும் காத்​திருக்​கிறார்​கள்.

மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை போதிக்​கும் இடைநிலை ஆசிரியர்​களும், பட்​ட​தாரி ஆசிரியர்​களும் ‘டெட்’ எனப்​படும் ஆசிரியர் தகு​தித் தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். தமிழகத்​தில் டெட் தேர்வை அரசு சார்​பில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்தி வரு​கிறது. கடைசி​யாக டெட் தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் மாதம் நடத்​தப்​பட்​டது.

ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் 2026 வரு​டாந்​திர தேர்வு கால அட்​ட​வணை​யின்​படி, இந்த ஆண்டு டெட் தேர்​வுக்கு மே மாதம் அறி​விப்பு வெளி​யிட்டு ஜூலை மாதம் தேர்வை நடத்த வேண்​டும். ஆனால், பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு டெட் தேர்​வுக்கு மட்​டுமே கடந்த பிப்​ர​வரி​யில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. தேர்வு உத்​தேச​மாக ஜூலை 4 மற்​றும் 5-ம் தேதி நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், கடந்த மே மாதம் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு ஜூலை​யில் தேர்வு நடத்​தப்பட வேண்​டிய பொது டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் இன்​னும் வெளி​யி​டா​மல் உள்​ளது.

இது தொடர்​பாக டெட் தேர்வை எதிர்​பார்த்து காத்​திருக்​கும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​கள், பிஎட் பட்​ட​தா​ரி​கள் கூறியதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். ஆனால், இந்த விதி​முறையை டிஆர்பி ஒரு​போதும் பின்​பற்​று​வ​தில்லை. 2 ஆண்டுக்கு ஒரு​முறை அல்​லது ஆண்​டுக்கு ஒரு​முறை என்ற அளவில்​தான் தமிழகத்​தில் டெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது.

அடுத்த டெட் தேர்​வுக்​கான அறி​விப்பு அக்​டோபரில் வெளி​யிடப்​படும் என டிஆர்பி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்ளது. முதலாவது டெட் தேர்​வுக்​கான அறி​விப்பே ஜூன் மாதம் ஆகி​யும் இன்​னும்​ வெளி​யிடப்​பட​வில்​லை. இந்​த நிலை​யில்​ அடுத்த டெட்​ தேர்​வை எப்​போது நடத்​தப்​போகிறார்​கள்​ என்​பது தெரிய​வில்​லை. எனவே பொது டெட்​ தேர்​வுக்​​கான அறி​விப்​பை டிஆர்​பி உடனடி​யாக வெளி​யிட்டு, விரைந்​து தேர்​வை நடத்​த வேண்​டும். இவ்வாறு அவர்கள் வேண்​டு​கோள்​ விடுத்துள்ளனர்.

பொது ‘டெட்​’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது எப்போது? - பிஎட்​ பட்டதாரிகள்​ காத்திருப்பு
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in