கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு

கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ.கமலி நேற்று வெளியிட்டார். உடன் துறை செயலர் அனு ஜார்ஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர், துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திரபாபு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ச.மு.க.கார்த்திகேயன்.

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ.கமலி நேற்று வெளியிட்டார். உடன் துறை செயலர் அனு ஜார்ஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர், துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திரபாபு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ச.மு.க.கார்த்திகேயன்.

Updated on
1 min read

சென்னை: ​கால்​நடை மருத்​துவ படிப்​புக்​கான தரவரிசை பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும்.

தமிழகத்​தில் சென்​னை, நாமக்​கல் உள்பட 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இக்​கல்​லூரி​களில் இளநிலை கால்​நடை மருத்​துவ படிப்​பில் (பி​விஎஸ்​சி) 660 இடங்​கள் உள்​ளன. இவை தவிர பிடெக் (பால்​வளம்), பிடெக் (கோழி​யின தொழில்​நுட்​பம்), பிடெக் (உணவு தொழில்​நுட்​பம்) படிப்​பு​களும் தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ பல்​கலைக்​கழக கல்​லூரி​களில் வழங்​கப்​படு​கின்​றன.

நடப்பு கல்வி ஆண்​டில் (2026-2027) பிவிஎஸ்​சி, பிடெக் படிப்​பு​களில் சேரு​வதற்​கான விண்​ணப்​பங்​கள் கடந்த மே 25 முதல் ஜூன் 17-ம் தேதி வரை ஆன்​லைனில் பெறப்​பட்​டன. இந்​நிலை​யில், பிவிஎஸ்​சி, பிடெக் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பித்த மாணவர்​களின் தரவரிசை பட்​டியலை​யும், ஒவ்​வொரு படிப்​பிலும் முதல் 5 இடங்​களைப் பிடித்த மாணவர்​களின் பட்​டியலை​யும் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் கால்​நடை பராமரிப்​புத்​துறை அமைச்​சர் எஸ்​.கமலி நேற்று வெளி​யிட்​டார்.

பிவிஎஸ்சி படிப்​புக்​கான தரவரிசை​யில் விழுப்​புரம் மாணவி ஆர்​.ஷாலினி முதலிடத்​தை​யும், கடலூர் மாணவி வி.​யாஷிகா 2-ம் இடத்​தை​யும், அதே மாவட்​டத்​தைச் சேர்ந்த மற்​றொரு மாணவி எம்​.மெர்​லின் 3-ம் இடத்​தை​யும், அரியலூர் மாணவர் கே.ஜனகன் 4-ம் இடத்​தை​யும், கடலூர் மாணவி டி.​திவ்யா வர்​ஷினி 5-ம் இடத்​தை​யும் பிடித்​தனர். 1-ம், 2-ம், 4-ம் இடங்​களைச் பிடித்​தவர்​கள் எம்​பிசி வகுப்​பை​யும், 3-ம், 5-ம் இடங்​களை பிடித்​தவர்​கள் ஆதி திரா​விடர் வகுப்​பையும் சேர்ந்​தவர்​கள். இவர்​கள் அனை​வரும் 200-க்கு 200 கட் ஆப் மதிப்​பெண் பெற்​றுள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிகழ்ச்​சி​யில் கால்​நடை பராமரிப்பு மற்​றும் மீன்​வளத்​துறை செயலர் அனு ஜார்​ஜ், தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ பல்​கலைக்​கழக பொறுப்பு துணைவேந்​தரும், பதி​வாள​ரு​மான டாக்​டர் ஆர்​.நரேந்​திர பாபு, தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் டாக்​டர் எம்​.எஸ்​.கே. கார்த்​தி​கேயன் ஆகியோர் கலந்​து​கொண்​டனர்.

கலந்​தாய்வு எப்​போது? - மாணவர்​கள் தங்​கள் வரிசையை https://tanuvas.ac.in . என்ற இணை​யதளத்​தில் அறிந்​து​கொள்​ளலாம். தரவரிசை​யில் ஏதேனும் குறை​பாடு இருந்​தால் அதுதொடர்​பாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை முறை​யிடலாம். 044-29997349 29997348 ஆகிய எண்​களில் தொடர்​பு​கொள்​ளலாம்.

அல்​லது admission@tanuvas.org.in என்ற மின்​னஞ்​சலுக்​கும் தகவல் தெரிவிக்​கலாம். ஆன்​லைன் கலந்​தாய்வு தேதி விவரம் விரை​வில் அறிவிக்​கப்​படும் என கால்​நடை மருத்​து​வ பல்​கலைக்​கழகம்​ தெரிவித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ.கமலி நேற்று வெளியிட்டார். உடன் துறை செயலர் அனு ஜார்ஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர், துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திரபாபு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ச.மு.க.கார்த்திகேயன்.</p></div>
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in