கல்லூரியில் சேராத மாணவர்களுக்காக சென்னையில் ‘உயர்வுக்கு படி’ சிறப்பு முகாம்

கல்லூரியில் சேராத மாணவர்களுக்காக சென்னையில் ‘உயர்வுக்கு படி’ சிறப்பு முகாம்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் 100 சதவீத உயர்​கல்வி சேர்க்கை என்​பதை இலக்​காக கொண்​டு, 12-ம் வகுப்பு முடித்து இதுவரை உயர் கல்​வி​யில் சேராத மாணவ, மாணவி​களை​யும் உயர்​கல்​வி​யில் சேர்ப்ப​தற்​காக சென்னை மாவட்டத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம் ஒருங்​கிணைப்​பில் ‘உயர்​வுக்கு படி’ முகாமை, அசோக் நகர் மகளிர் மேல்​நிலைப்​பள்ளி வளாகத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்த முகாமில் அரசு கலைக் கல்​லூரி​கள், அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​கள், அரசு ஐடிஐ நிறு​வனங்​களில் மாணவர்​கள் நேரடி சேர்க்கை செய்​யும் வித​மாக அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

415 மாணவ, மாணவி​கள் பங்​கேற்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. முகாமில் ஆட்​சி​யர் மாலதி ஹெலன், மாணவர்​களுக்கு ஆலோ​சனை​களை வழங்​கிப் பேசுகை​யில், “ சென்னை மாவட்​டத்​தில் மொத்​தம் உள்ள 86 அரசு மற்​றும் ஆதி​தி​ரா​விடர் நல மேல்​நிலை பள்​ளி​களில் பயின்ற 14,204 மாணவ, மாணவி​களில் இது​வரை 415 மாணவ மாணவி​கள் உயர்​கல்​வி​யில் சேர​வில்லை என கண்​டறியப்​பட்​டுள்​ளது.

பள்​ளிப்​படிப்பை முடித்து கல்​லூரி​யில் சேராமல் இடைநின்ற மாணவர்​களை உயர்​கல்விக்கு அனுப்​புவதே இந்த முகாமின் நோக்​க​மாகும்.

டெக்​ஸ்​டைல், ஆட்​டோமொபைல் துறை​களில் ஐடிஐ, பாலிடெக்​னிக் படித்த மாணவர்​கள் அதி​கம் தேவைப்​படு​கிறார்​கள்.

அவர்​களுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் காத்​திருக்​கின்​றன. இந்த முகாமை பயன்​படுத்தி அனைத்து மாணவ மாணவி​களும் நேரடி சேர்க்கை பெற்று உயர்​கல்​வியை தொடர வேண்​டும்.” என அறி​வுறுத்​தி​னார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in