ஆயுதங்களுக்காக செலவிடும் தொகையை கல்வி, சுகாதாரத்துக்கு பயன்படுத்த வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கோரிக்கை

விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய சர்​வ​தேச அறிவுசார் தொழில்நுட்ப திரு​விழா​வான 'கி​ரா​வி​டாஸ் 2026’ தொடக்க விழாவில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்:வி.எம்.மணிநாதன்

விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய சர்​வ​தேச அறிவுசார் தொழில்நுட்ப திரு​விழா​வான 'கி​ரா​வி​டாஸ் 2026’ தொடக்க விழாவில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்:வி.எம்.மணிநாதன்

Updated on
1 min read

வேலூர்: வள​ரும் நாடு​கள் அண்டை நாடு​களு​டன் நல்​லுறவை கடை பிடித்து ஆயுதங்​களுக்​காக செல​விடப்​படும் ​தொகையை கல்​வி, மருத்​து​வம், சுகா​தா​ரம் மற்றும் அடித்​தட்​டு, நடுத்தர மக்​களின் பொருளா​தார மேம்​பாட்​டுக்கு பயன்​படுத்த வேண்​டும் என விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தெரி​வித்​தார்.

வேலூர் விஐடி பல்​கலைக்​கழ​கத்​தில் சர்​வ​தேச அறிவு சார்தொழில் நுட்ப திரு​விழா​வான கி​ரா​வி​டாஸ் - 2026 நேற்று தொடங்​கியது. ஹெச்​.சி.எல் டெக் நிறு​வன டிஜிட்​டல் வணிக சேவை பிரி​வின் உலகளா​விய தலை​வர்பவன் வடபள்​ளி, திறமையாளர் தேர்வு பிரி​வின் நிர்​வாக துணைத் தலை​வர் பிரின்ஸ் ஜெயக்​கு​மார், வங்​கதேச துணைத் ​தூதர் முகமது அலி​ முச​மான் ஆகி​யோர் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்று பேசினர்.

வேலூர் விஐடி​யில் 3 நாட்​களுக்கு நடை​பெறும் இவ்​விழாவில், 31 நிகழ்ச்​சிகள், 62 பயிலரங்​கு​கள், 57 தொழில்​நுட்ப போட்​டிகள், 10 தொழில் முனை​வோர் நிகழ்​வு​கள் உள்பட மொத்​தம் 227 நிகழ்​வு​கள் இடம்​பெற்​றுள்​ளன. குறிப்​பாக, மத்​திய பாது​காப்பு ஆராய்ச்சி மேம்​பாட்டு அமைப்​பின் (டிஆர்​டிஓ) கீழ் இயங்​கும் போர் வாக​னங்​கள் ஆராய்ச்​சி, மேம்​பாட்டு நிறு​வனம் (சி​விஆர்​டிஇ) சார்​பில் இந்​திய ராணுவ நவீன போர் வாகன தொழில்​நுட்ப கண்​காட்​சி​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது பார்​வை​யாளர்களை வெகு​வாகக் கவர்ந்​தன.

விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி பேசியதாவது: ட்ரோன் தொழில்​நுட்​பம் போர்க்​களங்​களில் அதி​கம் பயன்​படுத்​தப்​படு​வதை காண்​கி​றோம். அதே ட்ரோன்​களை உற்​பத்திதிறனை அதி​கரிக்​க​வும் ஆக்க பணிகளுக்​கும் பயன்​படுத்த முடி​யும். இதில், இளைஞர்கள் உறு​தி​யாக இருக்க வேண்​டும்.

உலகில் சில நாடு​கள் ஆயுத உற்பத்​தியையே தொழிலாக கொண்டுள்​ளன. போர் மூண்​டால்​தான் தங்​களது ஆயுதங்களை விற்க முடியும் என்ற நோக்​கில்​செயல்​படு​கின்​றன. உலகள​வில் அதி​க​மாக ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடு​களில் ஒன்​றாக இந்​தி​யா​வும் உள்​ளது. வளரும் நாடு​கள் தங்களது அண்டை நாடு​களு​டன் நல்​லுறவை கடை​பிடித்​தால் ஆயுதங்​களுக்​கான தொகையை மிச்​சப்படுத்தி கல்​வி, மருத்​து​வம், சுகா​தா​ரம், அடித்​தட்​டு, நடுத்தர மக்களின் பொருளா​தார மேம்​பாட்​டுக்கு பயன்​படுத்த முடி​யும்.

தற்​போது இந்​தி​யா, பாகிஸ்​தான், வங்​கதேசம் ஆகிய நாடு​கள் தங்​களுக்​குள் ஆரோக்​கிய​மாக போட்​டி​யிட்டு வரு​கின்​றன. அதன்​படி, வளரும் நாடு​கள் தங்​களுக்​குள் ஒத்​துழைப்​பை​யும் ஆரோக்​கிய​மான போட்​டியையும் வளர்த்​துக்​கொண்டு பொருளா​தாரரீதி​யாக முன்​னேற வேண்​டும். இவ்​வாறு கூறி​னார்.

விழா​வில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன்​, சேகர்​ விசுவ​நாதன்​, செயல் இயக்​குநர்​ சந்​தி​யா பெண்​​டாரெட்​டி, உதவி துணைத்​ தலை​வர்​ காதம்​பரி விசுவ​நாதன்​, ரமணி ​பாலசுந்​தரம்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய சர்​வ​தேச அறிவுசார் தொழில்நுட்ப திரு​விழா​வான 'கி​ரா​வி​டாஸ் 2026’ தொடக்க விழாவில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்:வி.எம்.மணிநாதன்</p></div>
“இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி” - அமைச்சர் ராஜ்மோகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in