ஐஏஎஸ், ஐஎப்எஃஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

மெயின் தேர்வுக்கு 13,343 பேர் அனுமதி
ஐஏஎஸ், ஐஎப்எஃஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட உயர் பணி​களுக்​கான சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. மெயின் தேர்​வெழுத 13,343 பேர் தேர்வாகி உள்ளனர்.

ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்பட 24 வித​மான உயர் பணி​களுக்​காக சிவில் சர்​வீசஸ் தேர்வு ஆண்டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​தும் இத்​தேர்​வு, முதல்​நிலைத் தேர்​வு, மெயின் தேர்வு, ஆளு​மைத் தேர்வு என 3 நிலைகளை உள்​ளடக்​கியது.

இந்​நிலை​யில், இந்த ஆண்டு மேற்​குறிப்​பிட்ட பதவி​களில் 1,016 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக, முதல்​நிலைத் தேர்வு மே 24-ம் தேதி நடத்​தப்​பட்​டது. இத்​தேர்வை இந்​தியா முழு​வதும் 5.49 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழு​தினர். தமிழகத்​தில் ஏறத்​தாழ 40 ஆயிரம் பேர் தேர்​வில் கலந்​துக் கொண்​டனர். இந்​நிலை​யில், முதல்​நிலைத் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி இணை​யதளத்​தில் https://upsc.gov.in ) நேற்று வெளி​யிட்​டது.

அதன்​படி அடுத்த கட்ட தேர்​வான மெயின் தேர்​வெழுத 13,343 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 656 பேர் தமிழக மாணவர்​கள். முதல்​நிலைத் தேர்​வில் தேர்ச்சி பெற்​றவர்​கள் மெயின் தேர்​வுக்கு ஜூன் 19 முதல் 28-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என யுபிஎஸ்​சி அறி​வித்​துள்​ளது.

ஐஏஎஸ், ஐஎப்எஃஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி சம்பாதித்த எலான் மஸ்க்: அம்பானியின் மொத்த சொத்து மதிப்பை விட இருமடங்கு அதிகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in