மாணவர் பஸ் பாஸ் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

மாணவர் பஸ் பாஸ் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை வழங்கும் வகையில் எமிஸ் தளத்தில் உரிய விவரங்களை அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான முன்னேற் பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘எமிஸ்’ தளம் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு ஏதுவாக இதுவரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதியதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம், விருப்பமின்மை விவரங்களை எமிஸ் தளத்தில் அக்.15-க்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்’’என்று அதில் கூறப் பட்டுள்ளது.

மாணவர் பஸ் பாஸ் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
“தாராபுரத்தில் விஜய் கத்துவதற்கு பதிலாக நடிக்க தொடங்கிவிட்டார்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in