விஐடி சென்னையில் பல்கலைக்கழக தின விழா கொண்டாட்டம்

விஐடி சென்னையில் நடந்த பல்கலைக்கழக தின விழாவில் வேந்தர் கோ.விசுவநாதன் சிறந்த மாணவருக்கு சான்றிதழ் வழங்கினார். உடன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இந்தியன் வங்கி தலைமை செயல் அதிகாரி பினோத் குமார், மேஜர் வைபவ் சவுராசியா, துணைவேந்தர் தியாகராஜன், இயக்குநர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் மனோகரன்.

விஐடி சென்னையில் நடந்த பல்கலைக்கழக தின விழாவில் வேந்தர் கோ.விசுவநாதன் சிறந்த மாணவருக்கு சான்றிதழ் வழங்கினார். உடன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இந்தியன் வங்கி தலைமை செயல் அதிகாரி பினோத் குமார், மேஜர் வைபவ் சவுராசியா, துணைவேந்தர் தியாகராஜன், இயக்குநர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் மனோகரன்.

Updated on
2 min read

மேலக்கோட்டையூர்: ​விஐடி சென்​னை​யில் பல்​கலைக்​கழக தின விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. விழாவுக்கு விஐடி நிறு​வனரும் வேந்​தருமான கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்​கி​னார். விஐடி துணை தலை​வர் ஜி.​வி.செல்​வம் முன்​னிலை வகித்​தார்.

விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற இந்​தி​யன் வங்​கி​யின் நிர்​வாக இயக்​குநரும் தலைமை செயல் அதி​காரி​யு​மான பினோத் குமார் பேசும்​போது, “உல​கம் மிக வேக​மாகமாறி வரு​கிறது. அதற்​கேற்ப நாமும் நம் திறன்​களை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். இலக்​கு​களை இறுதி செய்து திட்​ட​மிட்டு பணி​யாற்​றி​னால் வாழ்​வில்சுலப​மாக வெற்றி பெறலாம்” என்​றார்.

கவுரவ விருந்​தினரும் விஐடிசென்​னை​யின் முன்​னாள் மாணவரு​மான மேஜர் வைபவ் சவு​ராசியா பேசும்​போது, “மாணவர்​கள் தங்​கள் மீதோ தங்​களின் திறமை​யின் மீதோ ஒரு​போதும் சந்​தேகம் கொள்​ளக் கூடாது. மனம் தளராமல் முயற்​சிக்க வேண்​டும்” என்​றார்.

விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: கல்​வி​தான் உண்​மை​யானசெல்​வம். யாரிடம் கல்வி இருக்​கிறதோ, அந்​தக் குடும்​பம் உயரும், அந்​தச் சமூகம் உயரும்,அந்த மாநிலம் உயரும், நாடும் உயரும். நாம் முன்​னேறிய தேச​மாக இருக்க விரும்​பு​கிறோம். அது கல்வி இல்​லாமல் சாத்​தி​யமில்​லை. கல்​வி​யிலும் நாம் சிறந்து விளங்​கி​னால் தான் பொருளா​தார ரீதி​யாக வளர்ந்த பிற நாடு​களு​டன் போட்​டி​யிட முடி​யும்.

உயர்​கல்​வி​யில் மாணவர் சேர்க்கை விகிதம் வளர்ந்த நாடு​கள் உட்பட அனைத்து நாடு​களி​லும் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்​ளது. இது​வே, இந்​தி​யா​வின் சராசரி 28 சதவீத​மாக உள்​ளது. 35 ஆண்​டு​களுக்கு முன்பு சீனா நம்​முடைய சராசரி அளவில் தான் இருந்​தது. ஆனால், தற்​போது சீனா முன்​னணி​யில் சென்​று​விட்​டது. சீனா​வில் தனி நபர் வரு​மானம் 14 ஆயிரம் டால​ராக உள்​ளது.

அதுவே இந்​தி​யா​வில் 3,000 டால​ராக உள்​ளது. இதற்​குக் காரணம் நாம் கல்​வி​யில் கவனம் செலுத்​தாதது​தான். நாம் கல்விக்கு முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தில்​லை. நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 6 சதவீதத்தை கல்விக்​காகச் செல​விட வேண்​டும் என்று பரிந்​துரைக்​கப்​பட்டு வருகிறது. ஆனால், நாம் 4 சதவீத அளவைக் கூட எட்​டிய​தில்​லை.

இந்த ஆண்​டின் மத்​திய பட்​ஜெட்​டில், கல்விக்​காக வெறும் 2.5 சதவீதம் மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்​டில் உயர்​கல்விக்​காக இந்​தியா 12 பில்​லியன் டாலர்​களை ஒதுக்​கி​யுள்​ளது. சீனா 800 பில்​லியன் டாலர்​களை ஒதுக்​கி​யுள்​ளது. இந்​தி​யா​வில் அரசுகள் கல்விக்கு அதிக நிதியை செல​விட வேண்​டும். இவ்​வாறு பேசி​னார்.

இதை தொடர்ந்​து, கல்​வி​யில் சிறந்து விளங்​கிய மாணவர்​கள், 100 சதவீதம் வரு​கைப்​ப​திவேடு கொண்ட மாணவர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு சான்​றிதழ்​களும், பதக்​கங்​களும் வழங்கி விருந்​தினர்​கள் கவுர​வித்​தனர். விழா​வில் விஐடி சென்​னை​யின் இணை துணை வேந்​தர் பேராசிரியர் தியாக​ராஜன், விஐடி சென்​னை​யின் இயக்​குநர் பேராசிரியர் சத்​தி​ய​நா​ராயணன் மற்​றும் கூடு​தல் பதி​வாளர் பேராசிரியர் மனோகரன் ஆகியோரும் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>விஐடி சென்னையில் நடந்த பல்கலைக்கழக தின விழாவில் வேந்தர் கோ.விசுவநாதன் சிறந்த மாணவருக்கு சான்றிதழ் வழங்கினார். உடன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இந்தியன் வங்கி தலைமை செயல் அதிகாரி பினோத் குமார், மேஜர் வைபவ் சவுராசியா, துணைவேந்தர் தியாகராஜன், இயக்குநர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் மனோகரன்.</p></div>
“அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in