

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த ஜன.23-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன.
இப்பதவிகளுக்கான கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண், தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.