‘அன்பாசிரியர்’ விருதுக்கான நேர்காணலில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்கள்

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதுக்கு இணையவழியில் நேர்காணல் நடத்திய நடுவர் குழுவினர்.படம்: எஸ்.சத்தியசீலன்

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதுக்கு இணையவழியில் நேர்காணல் நடத்திய நடுவர் குழுவினர்.படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனத்​துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்​கும் ‘அன்​பாசிரியர்’ விருதுக்​காக இணை​ய​வழி​யில் நடத்​தப்​பட்ட நேர்​காணலில் ஆசிரியர்​கள் ஆர்​வத்​தோடு பங்​கேற்​றனர்.

மாணவர்​களுக்கு தனித்​து​வ​மிக்க கல்​வியை அளிப்​பதுடன், மாறு​பட்ட சிந்​தனை​யுடன் செயல்​பட்டு பள்​ளிக்குப் பெருமை சேர்க்​கும் அர்ப்​பணிப்பு மிக்க அரசு, அரசு உதவி​பெறும் பள்​ளி​கள், தனி​யார் பள்​ளி​களின் ஆசிரியர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில் ‘அன்​பாசிரியர்’ விருது கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், 6-வது முறை​யாக ‘அன்​பாசிரியர்’ விருதுகளை ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனத்​துடன் சேர்ந்து இந்து தமிழ் திசை நாளிதழ் இந்த ஆண்​டும் வழங்க உள்​ளது. இந்த நிகழ்​வின் பங்​கு​தா​ரர்​களாக ராஜலட்​சுமி பொறி​யியல் கல்​லூரி, பொன்​வண்டு மேட்​டிக் லிக்​யூடு, மதுரை சாந்​தாஸ் சில்க்​ஸ், பிஎஸ்​ஆர் சில்க்ஸ் சாரீஸ், இந்​திய ஆயுள் காப்​பீட்​டுக் கழகம் (எல்​ஐசி) ஆகியவை இணைந்​துள்​ளன.

2026-ம் ஆண்​டுக்​கான அன்​பாசிரியர் விருதுக்கு தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள 40 மாவட்​டங்​களில் இருந்து 450-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்​தனர். அதில் முதல்​கட்​ட​மாக தேர்​வான மதுரை, திருச்சி மண்​டலங்​களை உள்​ளடக்​கிய மாவட்​டங்​களைச் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு இணை​ய​வழியி​லான நேர்​காணல் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆசிரியர்​கள் மிகுந்த ஆர்​வத்​தோடு பங்​கேற்​றனர்.

இந்த நேர்​காணலில் தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக மொழிப்​புல முன்​னாள் தலை​வர் பார​தி​பாலன், அப்​பல்​கலைக்​கழக சிறப்பு கல்​வி​யியல் பேராசிரியர் இரா.​மு.தமிழ்​செல்​வன், சென்னை மாநிலக் கல்​லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் சு.செல்​வகு​மாரன், சென்னை அடை​யாறு பாட்​ரிஷியன் கல்​லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் தனஞ்​செயன், வடபழனி ஆவிச்சி கலை, அறி​வியல் கல்​லூரி தமிழ்த் துறைத் தலை​வர் பிர​பாவ​தி, கிண்டி நோய்த் தடுப்​பு,

ஆய்வு நிறுவனப் பேராசிரியர் தில​கவ​தி, ராணி மேரி கல்​லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் கஸ்​தூரி​பாய், ஸ்டெல்லா மேரீஸ் கல்​லூரி சமூகப் பணித்துறைப் பேராசிரியர் மாதவி ஆகியோர் நடு​வர்​களாக செயல்​பட்​டனர்.

நேர்​காணலின்​போது, கற்​பித்​தலில் புதிய உத்​தி​களைப் பயன்​படுத்​துதல், புத்தக வாசிப்​பு, மாணவர் நலன், பள்​ளி​களில் மாணவர் சேர்க்​கையை உயர்த்​துதல், ஆரோக்​கிய மேம்​பாடு உட்பட பல்​வேறு அம்​சங்​களின் அடிப்​படை​யில் ஆசிரியர்​களிடம் நடு​வர்​கள் கேள்வி​களை முன்​வைத்​தனர். ஆசிரியர்​களின் தனிச் சிறப்​பு​களை​யும் ஆய்வு செய்​தனர். நடு​வர்​கள் தங்​கள் அனுபவங்​களை பகிர்ந்​து​கொண்​டனர்.

அவர்​கள் தெரி​வித்​த​தாவது:

மொழிப்​புல முன்​னாள் தலை​வர் பார​தி​பாலன்: அன்​பாசிரியர் விருது தேர்​வுக் குழு​வில் இடம்​பெற்​றது புதிய அனுபவம். ஆசிரியர்​கள் நவீன அறி​வியல் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி மிகச் சிறப்​பாக கல்​விப் பணி ஆற்றி வரு​கின்​றனர். அவர்​களது அனுபவம் ஒவ்​வொன்​றும் ஒரு புதிய கல்விக்​கான கதவு​களை திறந்​து​விட்​டது​போல இருந்​தது.

பேராசிரியர் மாத​வி: நேர்​காணலின்​போது, கேள்வி கேட்க கேட்க, பல ஆசிரியர்​கள் விளக்​க​மாக பதில் அளித்​தது ஆச்​சரிய​மாக இருந்​தது. அவர்​கள் அனுபவப்​பூர்​வ​மாக பேசி​யதை உணர முடிந்​தது. ஆசிரியர்​களாக இருந்​தா​லும் பல ஆராய்ச்​சிகளில் ஈடு​பட்​டுள்​ளனர். நூல்​களை வெளி​யிட்​டுள்​ளனர். புதிய மென்​பொருள்​களை பயன்​படுத்​துகின்​றனர். அவர்​களை மேலும் ஊக்​குவிக்க வேண்​டும்.

பேராசிரியர் தனஞ்​செயன்: விருதுக்கு வரும் விண்​ணப்​பங்​களைப் பார்த்தே அன்​பாசிரியர் விருது எந்த அளவுக்கு ஆசிரியர்​களை சென்​றடைந்​துள்​ளது என்​பதை உணரலாம். ஆசிரி​யர்​கள் பாடத்தைத் தாண்டி எவ்​வளவு விஷ​யங்​களை சொல்​லித் தரு​கின்​றனர் என்​பதை நேர்​காணலில் அறிய முடிந்​தது.

பேராசிரியர் தில​கவ​தி: ஆசிரியர்​களின் பல்​வேறு செயல்​பாடு​கள், அறி​வாற்​றல் என பல அம்​சங்​களை​யும் மதிப்​பிட்டு வழங்​கப்​படும் விருது இது. கற்​பித்​தலில் அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் பல்​வேறு புதிய முறை​கள், உத்​தி​களை​யும் பயன்​படுத்​து​வதை அறிய முடிந்​தது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

மதுரை, திருச்​சியை தொடர்ந்து, சென்​னை, கோவை மண்​டலங்​களுக்கு உட்​பட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த ஆசிரியர்​களுக்​கான இணை​ய​வழி நேர்​காணல் ஆக.22-ம் தேதி நடை​பெற உள்​ளது. நேர்​காணல் முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். தேர்​வான ஆசிரியர்​களுக்கு சென்னை தி​யாக​ராய நகர் வாணி மகாலில் ஆக.29-ம் தேதி நடை​பெறும் விழா​வில்​ பள்​ளிக்​கல்​வி அமைச்​சர்​ ராஜ்மோகன்​ ‘அன்​பாசிரியர்​’ விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.

<div class="paragraphs"><p>ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதுக்கு இணையவழியில் நேர்காணல் நடத்திய நடுவர் குழுவினர்.படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: முதல்வர் விஜய் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in