பிளஸ் 2 ஆங்கில பாட வினாக்கள் சற்று கடினம்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 ஆங்கில பாட வினாக்கள் சற்று கடினம்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆங்கில பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இதில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வினாத்தாளில் 3 மதிப்பெண் மற்றும் இலக்கணப் பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.

மற்ற பிரிவு கேள்விகள் எளிதாகவே இருந்தன’’ என்றனர். பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் 9-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிளஸ் 2 ஆங்கில பாட வினாக்கள் சற்று கடினம்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்த தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in