மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் பொருளாதார சிக்கலில் தவிக்கும் மாணவி சித்ராதேவி

மாணவி சித்ராதேவி, அவரது தாய் முருகலட்சுமி.

மாணவி சித்ராதேவி, அவரது தாய் முருகலட்சுமி.

Updated on: 
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உருளைக்குடி ரவுத்தர்பட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பொருளாதாரச் சிக்கலால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

கோவில்பட்டி அருகே உருளைக்குடியை அடுத்த ரவுத்தர்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி யாக்கோபு. இவரது மூத்த மகள் சித்ரா தேவி, உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர், பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் 466 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

சித்ராதேவியின் பொருளாதார நிலையை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், தங்களது பள்ளி விடுதியில் தங்கி, நீட் பயிற்சி மையத்தில் படிக்க அனுமதித்துள்ளனர். ஆனால், முதலாண்டில் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

மேலும், தனியார் விடுதியில் தங்க வேண்டிய நிலை உருவானது. ஆனாலும், மகளின் எதிர்காலத்துக்காக செலவு செய்து, அவரை யாக்கோபு படிக்க வைத்தார். 3-வது முறையாக இந்தாண்டு நீட் தேர்வில் 462 மதிப்பெண் எடுத்தார்.

கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. சித்ராதேவிக்கு முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு ரூ.8.45 லட்சம் செலுத்த வேண்டும்.

இதில், அவரது தந்தையின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு கீழே உள்ளதால், படிப்புக்கான கட்டணம் ரூ.4.50 லட்சத்தை செலுத்த வேண்டாம். மீதமுள்ள ரூ. 3.95 லட்சம் செலுத்த வேண்டும்.

ஆனால், அந்தப் பணத்தை செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் சித்ராதேவி உள்ளதால், உருளைக்குடி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பசாமியின் முயற்சியில் அறக்கட்டளைகளை நாடி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவி சித்ராதேவி கூறுகையில், “மருத்துவக் கல்லூரியில் பயில சீட் கிடைத்தும், பொருளாதார சூழல் காரணமாக கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு எனக்கு உதவி செய்தால் என்னால் மருத்துவப் படிப்பை முழுமையாக படித்து முடிக்க முடியும்,” என்றார்.

<div class="paragraphs"><p>மாணவி சித்ராதேவி, அவரது தாய் முருகலட்சுமி.</p></div>
ஞானேஷ் குமாரை குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in