‘நான் நம்பிக்கை பெற்ற கதை...’ - மாணவர் மனோஜ் பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

மாணவர் மனோஜ்

மாணவர் மனோஜ்

Updated on
2 min read

என் பெயர் மனோஜ். நான் கோயம்புத்தூரில் உள்ள CBM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc Computer Science இறுதி ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு பெற்றோர் இல்லை. என்னையும், என் தம்பியையும் - எங்கள் அத்தையும் மாமாவும் தங்களது தோட்டத்தில் வேலை செய்து எங்களை வளர்த்தார்கள். பள்ளி முடித்து கல்லூரிக்குள் நுழைந்த அந்த நாள்… “என்ன வாழ்க்கை? நான் என்ன ஆகப்போகிறேன்?” என்ற குழப்பத்திலும், பயத்திலும் தான் என் கல்லூரி பயணம் தொடங்கியது.

அந்த வாழ்க்கைக்குள் ஒளி போன்றுத் வந்தது — ‘நான் முதல்வன்’ திட்டம். என் இரண்டாவது செமஸ்டரில் நான் முதல்வன் எங்கள் கல்லூரிக்கு வந்த நாள்… என் வாழ்க்கை மெல்ல மாறத் தொடங்கிய நாள். திறன் மேம்பாட்டு பாடங்களும், அறிவுத் திறன் வகுப்புகளும் - “இவ்வளவு பயனுள்ள பாடங்களை ஒரு ரூபாயும் வாங்காமல் நமக்கு அரசு மூலம் கற்றுக் கொடுக்கிறார்களா?” என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

அந்த ஆச்சரியம் மெதுவாக… நம்பிக்கையாகவும், தெளிவாகவும் மாறியது. Communicative English course மூலம் நான் ஆங்கிலத்தில் பயமின்றி பேச ஆரம்பித்தேன். Python Fundamentals course என் கண்களில் coding-இன் உலகத்தைத் திறந்தது - ஒரு App, ஒரு Website எப்படிச் செய்யலாம் என்று புரிந்துகொண்டேன்.

நான்காவது செமஸ்டரில் வந்த Web Development course என் வாழ்க்கைக்கே ஒரு புதிய திசை தந்தது. அதில் தான் எனக்கு Designing மீது உள்ள ஆசையும் திறமையும் தெரியவந்தது. இன்று நான் என் career பற்றி பயப்படாமல், நம்பிக்கையுடன் நிற்கிறேன். என் வாழ்க்கையில் இருந்த அந்தப் பெரிய குழப்பம் — ‘நான் முதல்வன்’ காரணமாகவே முற்றிலுமாக மறைந்துவிட்டது. நான் முதல்வன் வழங்கிய placement training— Interview-க்கு எப்படி தயாராக வேண்டும், Resume எப்படி தயார் செய்ய வேண்டும், Group Discussion-ல் எப்படி நம்பிக்கையுடன் பேச வேண்டும் — எல்லாமே என்னுள் இருந்த பயத்தை அகற்றிப் போட்டது.

சமீபத்தில் என் தம்பிக்கும் “நான் முதல்வன்” மூலம் இலவசமாக Laptop கிடைத்தது. அவனும் இன்று தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறான். எங்கள் குடும்பத்துக்கே இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் இன்று நிற்கிற ஒவ்வொரு நம்பிக்கைக்கும், எனக்கு கிடைத்த ஒவ்வொரு திறமைக்கும் — காரணம் “நான் முதல்வன்” திட்டமே.

இது எனக்கு திசை கொடுத்தது. தெளிவு கொடுத்தது. மிக முக்கியமாக — நம்பிக்கை கொடுத்தது. இந்த அளவுக்குப் பெரிய மாற்றத்தை என்னை போன்ற லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் கொண்டு வந்து கொண்டிருப்பவர்… எங்களின் முன்னேற்றத்தையே தன் கனவாகக் கொண்டிருப்பவர்… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே. அய்யா, என்னைப் போன்ற ஒரு சாதாரண மாணவனின் வாழ்க்கையையே மாற்றியதற்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் தனுஷ். நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேர்ந்த பழங்குடியின இளைஞர். என் அம்மா விவசாயம் செய்து எங்களை வளர்த்தார். நான் அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். வாழ்க்கையில் அடுத்த படி என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் பழங்குடியின நலத்துறை நடத்திய முகாமில் கலந்து கொண்டேன். அங்கே தான் “வெற்றி நிச்சயம் திட்டம்” பற்றி அறிந்தேன்.

<div class="paragraphs"><p>தனுஷ்</p></div>

தனுஷ்

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஊட்டி, Tribal Research Centre-இல் sous Chef பயிற்சி எடுத்தேன். இரண்டு மாதங்கள் நடந்த அந்த பயிற்சியில் பல சமையல் கலை சார்ந்த திறன்களை கற்றுக்கொண்டேன். பயிற்சியை முடித்த பிறகு, எனக்கு A2B (Adyar Ananda Bhavan)-இல் மாதம் ரூ.18,000 சம்பளத்துடன் வேலை கிடைத்தது. என் வாழ்க்கையை மாற்றிய தமிழ்நாடு அரசு, TNSDC மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மனமார்ந்த நன்றி.

<div class="paragraphs"><p>மாணவர் மனோஜ்</p></div>
சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே செல்போன்களில் நிறுவுவது கட்டாயம் இல்லை: மத்திய அரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in