அரசுப் பள்ளிகளில் ஜூலை 10-ம் தேதி ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழு பதவியேற்பு

பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் ஜூலை 10-ம் தேதி ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழு பதவியேற்பு
Updated on
1 min read

சென்னை: மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்​களிடம் தலை​மைப் பண்பை வளர்க்​கும் வகை​யில் ‘மகிழ் முற்​றம்’ திட்​டத்​தின்​கீழ் குறிஞ்​சி, முல்​லை, மருதம், நெய்​தல், பாலை எனும் பெயரில் 5 மாணவர் குழுக்​கள் அமைத்​து, தலை​வர், அமைச்​சர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். இதன்​மூலம் மாணவர்​களிடம் அரசி​யல் அறிவு சார்ந்த அனுபவங்​கள், ஆளு​மைத் திறன் மேம்பட, மாதிரி சட்​டப்​பேர​வை, நாடாளு​மன்​றம் நடத்​தப்​படும். இதற்​காக, பள்ளித் தலைமை ஆசிரியர்​கள், ஆசிரியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இதுத​விர, குழு​வாக இணைந்து செயல்​படு​தல், சமூக மனப்​பான்​மை, வேற்​றுமை​கள் இல்​லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்​பின் நோக்​கம் ஆகும்.

மகிழ் முற்​றம் மாணவர் குழு கட்​டமைப்​பின்​கீழ், பள்​ளி​யில் உள்ள அனைத்து மாணவர்​கள், ஆசிரியர்​களும் குறிஞ்​சி, முல்லை உட்பட 5 குழுக்​களாக பிரிக்​கப்​படு​வார்​கள். அனைத்து வகுப்​பு​களில் பயிலும் மாணவர்​களும் இந்த குழுக்​களில் சேர்க்​கப்​பட்​டு, எமிஸ் தளம் மூல​மாக அதன் விவரம் கண்​காணிக்​கப்​படும்.

அந்த வகை​யில், நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான மகிழ் முற்​றம் மாணவர் குழு​வின் செயல்​பாடு​களை முறை​யாக செயல்​படுத்த வேண்​டும். ஜூன் 30-ம் தேதிக்​குள் குழு ஒதுக்​கீட்டை முடித்​து, ஜூலை 1-ம் தேதிக்​குள் குழு அமைப்​பின் தலை​வர், மகிழ் முற்​றம் ஆசிரியர் ஒருங்​கிணைப்​பாளர், குழு பொறுப்​பாசிரியர்​கள், மாணவர் குழு தலை​வர் (ஹவுஸ் கேப்​டன்) ஆகியோரை தேர்வு செய்​ய​வேண்​டும்.

தொடர்ந்​து, மாணவர் அமைச்​சர் பிரச்​சா​ரத்தை ஜூலை 6-ம் தேதி மேற்​கொள்ள வேண்​டும். மாணவர் அமைச்​சர் தேர்​தல் 7-ம் தேதி நடை​பெறும். நிறை​வாக, ஒவ்​வொரு குழு​வுக்​கான மாணவர் தலை​வர்​கள், வகுப்பு தலை​வர்​கள், தலைமை பொறுப்பு ஆசிரியர் ஆகியோரது பதவி​யேற்பு விழா அனைத்து பள்​ளி​களி​லும் ஜூலை 10-ம் தேதி நடை​பெறு​வதை தலைமை ஆசிரியர்​கள் உறுதி செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளிகளில் ஜூலை 10-ம் தேதி ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழு பதவியேற்பு
கற்பித்தல் செயல்பாடு: ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in