

படம்: வி.எம்.மணிநாதன்
சென்னை: அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்தது. தற்போது மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று (ஜூலை 6) பிற்பகல் வெளியிடப்படும்.