ஏவிஜிசி துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

ஏவிஜிசி துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

மாற்​றுத் திற​னாளி​கள் மேம்​பாட்​டுத் திட்​டம் குறித்து பட்​ஜெட்​டில் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சி என்ற தொலைநோக்​குப் பார்​வையை எட்​டும் வகை​யில் மாற்​றுத்​திற​னாளி​களுக்​காக பல செயல் திட்​டங்​கள் கொண்​டு​வரப்​படு​கின்​றன.

தகவல் தொழில்​நுட்​பம், ஏவிஜிசி எனப்​படும் வரைகலை, ஒளிக் காட்​சிகள், விளை​யாட்டு சித்​திரக்​கலைத் துறை​கள், விருந்​தோம்​பல், போன்ற துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​குத் தனித்​து​வ​மான பயிற்சி அளிக்​கப்​பட்டு அவர்​களது கண்​ணி​ய​மான வாழ்​வா​தார வாய்ப்​பு​கள் உறுதி செய்​யப்​படும்.

மாற்​றுத் திற​னாளி​கள் நலன் பாது​காப்​புத் திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள அனைத்து மாற்​றுத்​திற​னாளி​களுக்​கும் உயர்தர உதவி சாதனங்​கள் சரி​யான நேரத்​தில் கிடைக்க இந்த பட்​ஜெட்​டில் பின்​வரும் அம்​சங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன:

>>உதவி சாதனங்​களின் உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், ஆராய்ச்​சி​யில் அதிக முதலீடு​களை மேற்​கொள்​ள​வும், இந்​திய செயற்கை உறுப்​பு​கள் உற்​பத்தி கழகத்​திற்கு ஆதரவு அளிக்​கப்​படும்.

>>பிரதமரின் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மையங்​களை வலுப்​படுத்தி அவற்​றில், மாற்​றுத்​திற​னாளி​கள், மூத்த குடிமக்​கள் ஆகியோ​ருக்​கான உதவி உபகரணங்​கள் அடங்​கிய நவீன சில்​லறை விற்​பனை மையங்​களை அமைக்க ஆதர​வளிக்​கும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார்.

ஏவிஜிசி துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 40% ஆக குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in