சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் அரியர் பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற சிறப்பு அரியர் தேர்வு டிசம்பர் 21-ல் தொடங்கும். இதற்கு டிசம்பர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணமாக ரூ.5 ஆயிரம், தேர்வு கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.150-ம் செலுத்த வேண்டும். தேர்வு காலஅட்டவணை டிசம்பர் 15-ல் வெளியிடப்படும். அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.