அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்

அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: தமிழகத்​தில் 500 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில், செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யி​லான தன்​நிலைக் கற்​றல் திட்​டத்தை அமைச்​சர்​கள் ராஜ்மோகன், தென்​னரசு ஆகியோர் தொடங்கி வைத்​தனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர் ஒன்​றியம், செரப்​பணஞ்​சேரி ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன், வெளி​நாடு வாழ் தமிழர்​கள் நலத்​துறை அமைச்​சர் தென்​னரசு ஆகியோர் குத்​து​விளக்​கேற்றி திட்​டத்​தைத் தொடங்கி வைத்​தனர். நிகழ்ச்​சிக்கு பள்​ளிக் கல்​வித்​துறை அரசு செயலர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா தலைமை வகித்​தார்.

நிகழ்ச்சியில் அமைச்​சர் ராஜ்மோகன் பேசிய​தாவது: நடப்பு கல்​வியாண்​டில் 15 மாவட்​டங்​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 500 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் ‘தன்​நிலை கற்​றல் திட்​டம்’ செயல்​படுத்​தப்​படு​கிறது. இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்​கள் பயன்​பெறவுள்​ளனர். தனியார் பள்ளி மாணவர்​களுக்கு இணை​யாக அரசுப் பள்ளி மாணவர்​களும் நவீன தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி கல்​வி​யில் சாதிக்க இத்​திட்​டம் உதவும்.

தலை​மையாசி​ரியர்​கள், ஆசி​ரியர்​கள் மற்​றும் பள்​ளிப் பணி​யாளர்​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு திட்​டத்தை வெற்​றிகர​மாகச் செயல்​படுத்த வேண்​டும் என்​றார்.

தமிழ்​நாடு தன்​நிலைக் கற்​றல் திட்​டம் என்​பது செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் மாணவர்​களின் தனிப்​பட்ட கற்​றல் திறன், வேகம் மற்​றும் கற்​றல் இடைவெளி​களைக் கண்​டறிந்து, அவரவர் தேவைக்கு ஏற்ப கற்​றல் வாய்ப்​பு​ களை வழங்​கும் திட்​ட​மாகும். இதில் ஆசி​ரியர்​களின் வழிகாட்​டுதலுடன் மாணவர்​கள் கணி​னியைத் தனித்​தனியாகப் பயன்​படுத்தி தமிழ், ஆங்​கிலம், கணிதம் ஆகிய பாடங்​களைக் கற்கமுடியும். மாணவர்​களின் கற்​றல் முன்​னேற்​றத்​தைக் கண்​காணித்து, அவர்​களின் கற்​றல் அடைவு​களை மேம்​படுத்​தவும் இத்​திட்​டம் உதவும்.

அரியலூர், கடலூர், காஞ்​சிபுரம், நாகப்​பட்​டினம், பெரம்​பலூர், திருச்சி, ராம​நாத​புரம், திரு​வாரூர், வேலூர், விழுப்​புரம், விருதுநகர், செங்​கல்​பட்டு, திரு​வண்​ணா​மலை, திருப்​பூர், தூத்​துக்​குடி ஆகிய 15 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பள்​ளி​களின் ஆசி​ரியர்​களுக்கு இதற்​கான பிரத்​யேகப் பயிற்​சி​யும் வழங்​கப்​படு​கிறது. கல்வி வளர்ச்​சிக்​கான தன்​னார்வ அமைப்​பான எஜுகேஷனல் இனி​ஷியேட்​டிவ்ஸ் நிறு​வனத்​துடன் மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில், இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

X