நேர்காணல் இல்லாத தொழில்நுட்ப பணிகள் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மே 11-ல் ஆரம்பம் - டிஎன்பிஎஸ்சி

நேர்காணல்  இல்லாத தொழில்நுட்ப பணிகள் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மே 11-ல் ஆரம்பம் - டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

சென்னை: நேர்​காணல் இல்​லாத பதவி​களுக்​கான ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் உதவிப் பொறி​யாளர் உட்பட 14 பதவி​களுக்​கான நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு மே 11 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற இருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்​காணல் இல்​லாத பதவி​களுக்​கான ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்வு நடத்​தப்​பட்டு தேர்​வர்​களின் மதிப்​பெண் மற்​றும் தரவரிசை கடந்த ஜனவரி 23-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்து இணை​ய​வழி சான்​றிதழ் சரி​பார்ப்பு நடத்​தப்​பட்​டது. தற்​போது உதவி கணக்கு அலு​வலர், உதவி பொறி​யாளர், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார உதவி இயக்​குநர் உள்​ளிட்ட 14 பதவி​களுக்​கான நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு மே 11 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

இதற்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. அழைப்​பாணையை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும்.

இது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவல் தெரிவிக்​கப்​படும்.

அழைப்​பாணை தனியே அஞ்​சலில் அனுப்​பப்​ப​டாது. குறிப்​பிட்ட தேதி​யில் சான்றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வுக்கு வரத் தவறி​னால் எக்​காரணம் கொண்​டும் மறு​வாய்ப்பு அளிக்​கப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

நேர்காணல்  இல்லாத தொழில்நுட்ப பணிகள் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மே 11-ல் ஆரம்பம் - டிஎன்பிஎஸ்சி
அமெரிக்காவில் இருந்து குமரி வந்து உயிரை மாய்த்துக் கொண்ட கேரள சகோதரிகளின் உருக்கமான மின்னஞ்சல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in