

கோப்புப் படம்
சென்னை: அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் அனுப்பிய சுற்றறிக்கை:
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளாகங்களில் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பயிற்சி பெற்ற பாதுகாப்புபணியாளர்களை அமர்த்துதல் போன்ற அரசு உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.