

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்தை தூய்மை
யாக வைக்க வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். காலை உணவு, சத்துணவுக் கூடங்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்.
பழுதான கட்டிடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு, இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.