தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

சென்னை: இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். தமிழகம் முழு​வதுள்ள 7,688 தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணமின்றி இலவச​மாகப் படிக்​கலாம்.

தமிழகத்​தில் 2013-ல் அமல்​படுத்​தப்​பட்ட இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை சுமார் 5.7 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர். வரும் கல்​வி​யாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி விண்​ணப்​பப் பதிவு ஏப்​.20-ம் தேதி தொடங்​கியது. கடந்த 10 நாட்​களில் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ள​னர்.

மே 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்​ள​தால், விருப்​ப​முள்​ளவர்​கள் https://rteadmission.tnschools.gov.in/ என்ற இணை​யதளம் வழி​யாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதி​கபட்​சம் தங்​கள் இருப்​பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்​ளி​களில் விண்ணப்பிக்​கலாம். பள்​ளி​யில் நிர்​ண​யித்த இடங்​களை​விட அதிக விண்​ணப்​பங்​கள் வந்​தால் குலுக்​கல் முறை​யில் மாணவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள் என்​று துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்
ஷுப்மன் கில் அதிரடியில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in