முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடையில் அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏஐ ஆய்வகம்

முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடையில் அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏஐ ஆய்வகம்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் முன்​னாள் மாணவர் வழங்​கிய ரூ.1 கோடி நன்​கொடை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள அதிநவீன ஏஐ ஆய்​வகம் நேற்று திறந்து வைக்​கப்​பட்​டது.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் அதிநவீன செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஆய்​வகத்தை அமைப்​ப​தற்​காக முன்​னாள் மாணவரும், கார்​சன் சொல்​யூஷன்ஸ் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அலு​வலரு​மான சுந்​தர் வைத்​தி​ய​நாதன் ரூ.1 கோடி நன்​கொடை வழங்​கி​னார்.

இவர் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் உறுப்பு கல்​லூரி​யான கிண்டி பொறி​யியல் கல்​லூரி​யில் 1990-ம் ஆண்டு எலெக்ட்​ரானிக்ஸ் கம்​யூனிகேஷன் இன்​ஜினியரிங் பட்​டம் பெற்​றார்.

அவர் வழங்​கிய ரூ.1 கோடி நிதி​யில் உயர் செயல் திறன் கொண்ட கணினி கட்​டமைப்​பு​களைக் கொண்ட ஏஐ ஆய்​வகம் (வைதர்​மா அமைக்​கப்​பட்​டுள்​ளது.

செயற்கை நுண்​ணறி​வு, இயந்​திர கற்​றல், ரோபோட்​டிக்​ஸ், டேட்டா சயின்ஸ் ஆகிய வளர்ந்து வரும் துறை​களில் மாணவர்​களின் ஆராய்ச்​சித் திறனை மேம்​படுத்​து​வதே இந்த ஆய்​வகத்​தின் முதன்மை நோக்​கம்.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் சுந்​தர் வைத்​தி​ய​நாதன் இந்த அதிநவீன ஏஐ ஆய்​வகத்தை திறந்​து​வைத்​தார். அவர் பேசும்​போது, “எ​திர்​கால தொழில்​துறையை செயற்கை நுண்​ணறி​வு​தான் தீர்மானிக்​கப் போகிறது.

எனவே, மாணவர்​கள் இந்த நவீன வசதியை பயன்படுத்தி சமூகத்​துக்கு தேவை​யான ஆக்​கப்​பூர்​வ​மான தீர்​வு​களைக் கண்டறிய வேண்டும்” என்றார்.

தலைமை தாங்கிய பதி​வாளர் வி.குமரேசன், “தொழில்​துறைக்கும் கல்வி நிறு​வனங்​களுக்​கும் இடையி​லான பிணைப்பு மாணவர்​களின் எதிர்​காலத்​துக்கு மிக​வும் அவசியம்” என்​றார். கிண்டி பொறியியல் கல்​லூரி டீன் பி.ஹரி​கரண், இசிஇ துறை தலை​வர் எம்​ஏ.​பாக்​ய​வேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடையில் அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏஐ ஆய்வகம்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in