பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்.6-ம் வரை நடைபெறுகிறது.

இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க வேண்டும்.

அதாவது கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த வினாவில் தவறு அல்லது முரண்பாடு உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.

தேர்வு நடைபெற்ற நாளிலேயே அந்தந்த பாடம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்த தகவல்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘திருத்தணி பேருந்து நிலையத்துக்கு மபொசி பெயரை மாற்றி கருணாநிதி பெயரா?’ - சீமான் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in