வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு

வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: வட்​டாரக் கல்வி அலு​வலருக்கு பணிக் கொடையை, மாவட்​டக் கல்வி அலு​வலரே விடுவிக்​கலாம் என்​று, தொடக்​கக் கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் ஓய்​வு​பெற அனு​மதி வழங்​கும் போது, அவர்​கள் பணி​யாற்​றிய ஒன்​றி​யங்​களில் தணிக்கை அறிக்கை பெற்று பின்​னர் மாவட்​டக்​கல்வி அலு​வலர் வழி​யாக பரிந்​துரை செய்து பணிக் கொடை விடு​விப்பு ஆணை பெறு​வதற்கு கால​தாமதம் ஏற்​படு​கிறது. இதைத் தவிர்க்​கும் பொருட்​டு, வட்​டாரக் கல்வி அலு​வலர்​களுக்​கு, மாவட்​டக் கல்வி அலு​வலர்​களே பணிக் கொடை பெற்று வழங்​கு​மாறு தற்​போது அறி​வுறுத்​தப்​படு​கிறது.

இதையடுத்​து, வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் பணி​யாற்​றிய அனைத்து ஒன்​றி​யங்​களி​லும், துறைத் தணிக்கை நடை​பெற்று அறிக்கை பெறப்​பட்​டதா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். மேலும், வட்​டாரக் கல்வி அலு​வலர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை​யால் தொடரப்​பட்ட குற்​ற​வியல் வழக்கோ நிலு​வை​யில் இல்லை என்​ப​தையும் உறுதி செய்து கொள்ள வேண்​டும்.

இதற்​கான வழி​முறை​களை பின்​பற்​றாமல் பணிக்​கொடை விடுவிக்​கப்​பட்​டு, பின்​னர் தணிக்​கை​யில் வட்​டாரக் கல்வி அலு​வலர் அரசுக்கு செலுத்த வேண்​டிய தொகை ஏதும் இருப்​பின், அதற்கு மாவட்​டக் கல்வி அலு​வலரே முழுப் பொறுப்​பா​வார் என்​ப​தால் கூடு​தல் கவனத்​துடன் மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​படு​கிறது.

வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு
“ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” - ட்ரம்ப் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in