இலவச மடிக்கணினி வழங்க பிஎச்டி மாணவர்கள் கோரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு ஆராய்ச்சி மாணவர்​கள் சங்​க பொதுச்​செய​லா​ளர் சண்​முக​ராஜன், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினுக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நம்​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் ஆராய்ச்சி படிப்​பு​களை ஏராள​மான மாணவர்​கள் பயின்று வரு​கின்​றனர்.

பிஎச்டி மாணவர்​களில் பலர் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​கள். மாநிலத்​தில் உயர் கல்​வி​யின் வளர்ச்​சிக்​காக பல்​வேறு திட்​டங்​களை தமிழக அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

தற்​போது கல்​லூரி​களில் படிக்​கும் இளநிலை மற்​றும் முது​நிலை மாணவர்​களுக்கு இலவச​மாக லேப்​டாப் வழங்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டத்​தில் பிஎச்டி மாணவர் சேர்க்​கப்​பட​வில்​லை. மற்ற மாணவர்​களை​விட மடிக்கணினி அதி​க​மாக தேவைப்​படு​வது பிஎச்டி மாணவர்​களுக்​குத்​தான்.

தரவு சேமிப்​பு, பகுப்​பாய்​வு, ஆய்​வறிக்கை எழுதுதல் உட்பட பல்​வேறு பணி​களுக்கு மடிக்கணினி அவசி​யம். ஆனால், அவர்​களுக்கு தனிப்​பட்ட கணினி வசதி இல்​லாதது தரமான ஆராய்ச்​சிக்கு பெரும் தடை​யாக உள்​ளது.

எனவே பிஎச்டி மாணவர்​களுக்கு இலவச மடிக்கணினி திட்​டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முன்வர வேண்​டும். இத்​திட்​டம் அமலா​னால் தமிழகத்​தில் ஆராய்ச்சி உற்​பத்தி திறன், தரம் உயரும். மேலும், தமிழகத்​தில் உள்ள பல்​கலைக்​கழகங்​களில் இருந்து வெளி​யாகும் ஆய்​வுக் கட்​டுரைகளின் எண்​ணிக்​கை​யும் அதி​கரிக்​கும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in