வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம்

வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம்
Updated on
1 min read

கோவை: கோவை​யில் உள்ள வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்குறிப்​பு: வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வேளாண்​மை, தோட்​டக்​கலை, வேளாண் பொறி​யியல், வனவியல், வேளாண் உயி​ரித் தொழில்​நுட்​பம், சமூக அறி​வியல், உணவுத் தொழில்​நுட்​பம், வேளாண் வணி​கம், சுற்​றுச்​சூழல் அறி​வியல் மற்றும் வேளாண் அறி​வியலின் பிறதுறை​கள் உள்​ளிட்ட 30 பிரிவு களில் முனை​வர் பட்​டப்​படிப்​பை வழங்​குகிறது.

இதன்படி 2026–27 கல்​வி​யாண்​டுக்​கான இணை​ய​வழி மாணவர் சேர்க்கை விண்​ணப்​பப் பதிவு தொடங்​கியுள்ளது. தகு​தி​யுடைய விண்​ணப்ப​தா​ரர்​கள் https:/admissionsatpgschool.tnau.ac.in/ இணை​யதளம் மூலம் அக்.23க்குள் விண்​ணப்​பிக்கலாம்.கூடுதல் விவரங்களை pgadmission@tnau.ac.in மின்​னஞ்​சல் மூல​மும் 94890 56710 என்ற செல்​போன் எண்​ணிலும்​ தொடர்​பு கொள்​ளலாம்​.

வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம்
“இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி” - அமைச்சர் ராஜ்மோகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in