கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
 கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள கால்​நடை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவி​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். விண்​ணப்​பிக்​கும் அவகாசம் 23-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடை மருத்​து​வம், பராமரிப்பு படிப்​புக்கு (பி​விஎஸ்சி - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன.

இதில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 15 சதவீத இடங்​கள் வழங்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வெளி​யில் உள்ள உணவு, பால்​வளத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 60 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. இதில் உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​களும், பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​களும் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கின்​றன.

ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்​தி, மேலாண்​மைக் கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், உணவு தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தி​யில் உள்ள இணைப்​புக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்ளன. 3 பி.டெக். பட்​டப் படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​ட​வை.

இந்​நிலை​யில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக். படிப்​பு​களுக்கு நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது கடந்த மே 25-ம் தேதி தொடங்​கியது. பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்​புக்கு 10,678 பேர், பி.டெக். படிப்​பு​களுக்கு 5,356 பேர் என மொத்​தம் 16,034 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி​யுடன் முடிவ​தாக ஏற்கனவே அறிவிக்​கப்​பட்டிருந்தது. இந்நிலை​யில், மாணவர்​களின் கோரிக்​கையை ஏற்று, ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், வெளி​நாட்​டினர். வெளி​நாடு வாழ் இந்​தி​யர், அவர்​களது வாரிசுகள், அவர்​களது நிதி ஆதரவு பெற்றவர்​களுக்கு இந்த கெடு நீட்​டிக்​கப்​பட​வில்​லை. அவர்​கள் 17-ம் தேதி மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த அனைத்து படிப்​பு​களுக்​கும் பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர்​ சேர்க்​கை நடை​பெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p> கோப்புப்&nbsp;படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி </p></div>
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in