இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நாடு முழுவதும் மே 3-ல் நீட் தேர்வு

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நாடு முழுவதும் மே 3-ல் நீட் தேர்வு
Updated on
1 min read

சென்னை: இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு நாடு​முழு​வதும் வரும் மே மாதம் 3-ம் தேதி நடை​பெறுகிறது. அதற்​காக பாடத்​திட்​டங்​கள் இணையதளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

நாடு​முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஹோமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​புகளுக்கான அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​ம் மாணவர்களைக் கொண்டு நிரப்​பப்​படு​கிறது.

அதே​போல், ராணுவ கல்​லூரிகளில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்கான மாணவர் சேர்க்​கைக்கு நீட் தேர்வு கட்​டாய​மாக்கப்​பட்​டுள்​ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. அதன்​படி 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் வரும் மே மாதம் 3-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்​ளது.

இதுதொடர்​பாக தேசிய தேர்​வு​கள் முகமை வெளி​யிட்​டுள்ளசெய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான நீட் தேர்வு நாடு​முழு​வதும் வரும் மே மாதம் 3-ம் தேதி பிற்​பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​பது பிப்​.8-ம் தேதி (நேற்​று)https://neet.nta.nic.in/ என்ற இணை​யதளத்​தில் தொடங்​கி​யுள்​ளது. மார்ச் 8-ம் தேதி நள்​ளிரவு 11.50 மணி வரை விண்​ணப்​பிக்​கலாம். மேலும் மார்ச் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்​ணப்​பத்​தில் திருத்​தங்​கள் இருந்​தால் மேற்​கொள்​ளலாம்.

தேர்வு நகரம், தேர்வு மையம் விவரங்​கள் பின்​னர் அறிவிக்​கப்​படும். தேர்வுக் கட்​ட​ணம் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை இணை​யதளத்தை பார்த்து அறிந்து கொள்​ளலாம். இவ்​வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த நீட் தேர்வானது தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படவுள்​ளது. தேர்​த​வில் 180 கேள்வி​கள் இடம்பெறும். ஒவ்​வொரு கேள்விக்​கும் தலா 4 மதிப்​பெண்​கள் வீதம் மொத்​தம் 720 மதிப்​பெண்​களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தாவர​வியல் மற்​றும் விலங்​கியலை உள்​ளடக்​கிய உயி​ரியல் பாடத்​தில் இருந்து 360 மதிப்​பெண்​களுக்​கும் இயற்​பியல் மற்​றும் வேதி​யியலில் பாடங்​களில் தலா 180 மதிப்​பெண்​களுக்​கும் கேள்வி​கள் இடம்​பெறும். தவறான பதி​ல் அளித்தால் ஒரு மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும்.

நீட் தேர்​வுக்​கான பாடத்​திட்​டங்​களை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) https://www.nmc.org.in/ என்ற இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில்தான் நீட்​ தேர்​வுக்​கான கேள்வி​கள்​ கேட்​கப்​படவுள்​ளன.

இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நாடு முழுவதும் மே 3-ல் நீட் தேர்வு
“குரூப் 2 தேர்வு ஏன் ரத்து செய்யப்பட்டது என தெரியவில்லை” - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in