பாலிடெக்னிக் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம்

பாலிடெக்னிக் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ திட்ட தொழில்​நுட்ப படிப்புகள் சேர்க்​கப்பட உள்​ளன. இதற்​காக ஆசிரியர்​களுக்கு அளிக்​கப்​படும் 6 நாள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி நேற்று தொடங்​கியது.

தமிழகத்​தில் நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்​டரில் நான் முதல்​வன் திட்ட தொழில்​நுட்ப படிப்​பு​கள் அறி​முகப்​படுத்​தப்பட உள்ளன.

இதைத்​தொடர்ந்​து, அத்​தொழில் ​நுட்ப பாடங்​களை நடத்த இருக்​கும் ஆசிரியர்​களுக்கு திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி அளிக்க தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​தது.

இதற்கு தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​களை டிசம்​பர் 15 முதல் 20 வரை பயிற்​சிக்கு அனுப்பி வைக்​கு​மாறு தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்​கும் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், பாலிடெக்னிக் ஆசிரியர்​களுக்​கான 6 நாள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது.

மொத்​தம் 10 மண்​டலங்​களாகப் பிரித்து சென்​னை, திரு​வண்​ணா​மலை, கடலூர், திருச்​சி, நாகப்​பட்​டினம், நாமக்​கல், கோவை, சிவகங்​கை, மதுரை, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, வேலூர், விழுப்​புரம், வலங்​கை​மான் ஆகிய இடங்​களில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் பாலிடெக்னிக் கல்​லூரி​களில் இப்​ப​யிற்சி நடை​பெறுகிறது. இப்​ப​யிற்​சியை வெற்​றிர​மாக முடிக்​கும் ஆசிரியர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின்​ சான்​றிதழ்​ வழங்​கப்​படும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in