உயர் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார முறையில் மாற்றம்: நாக் கமிட்டி இயக்குநர் தகவல்

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், நாக் கமிட்டி இயக்குநர் ஜி.கண்ணபிரான். | படம்: எம்.மூர்த்தி |

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், நாக் கமிட்டி இயக்குநர் ஜி.கண்ணபிரான். | படம்: எம்.மூர்த்தி |

Updated on
1 min read

திருச்சி: உயர் கல்வி நிறு​வனங்​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும் முறை​யில் விரை​வில் மாற்​றம் வர உள்​ள​தாக தேசிய தர மதிப்​பீட்டு நிர்​ணயக் குழும (நாக்) இயக்​குநர் ஜி.கண்ணபிரான் தெரி​வித்​தார்.

திருச்சி பார​தி​தாசன் பல்​கலை.​யின் 40-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. துணைவேந்​தர் பொறுப்​புக் குழு கன்​வீனரும், உயர் கல்வித் துறை ஆணை​யரு​மான இ.சுந்​தர​வள்ளி வரவேற்​றார்.

பல்​கலை. வேந்​தரும், ஆளுநரு​மான ஆர்​.என்​.ரவி தலைமை வகித்​து, 690 முனை​வர் பட்ட ஆய்​வாளர்​களுக்கு பட்​டங்​களை​யும், பல்​கலை. அளவில் தரவரிசைப் பட்​டியலில் இடம் பெற்ற பெற்ற 90 பேருக்கு பதக்​கம், பட்​டங்​களை​யும் வழங்​கி​னார்.

விழா​வில் ‘நாக்’ இயக்​குநர் ஜி.கண்​ணபி​ரான் பேசி​ய​தாவது: தேசிய கல்விக் கொள்கை நாட்​டின் உயர்​கல்வி அமைப்​பில் அடிப்​படை மாற்​றத்தை உரு​வாக்க உறு​தி​யளிக்​கிறது. உயர் கல்வி நிறு​வனங்​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும் முறை​யில் நல்ல மாற்​றம் வர உள்​ளது.

அரசுக்கு கல்​வித் தரத்தை மேம்​படுத்​து​வதற்​கான திட்​டங்​களை வகுத்​து, அங்​கீ​காரக் குழு பரிந்​துரைக்க உள்​ளது. நாட்​டில் 75 சதவீத கல்​லூரி​களும், 55 சதவீத பல்​கலைக்​கழகங்​களும் இது​வரை எவ்​வித​மான அங்​கீ​கார​மும் பெற தங்​களை உட்​படுத்​திக்​கொள்​ள​வில்​லை.

இந்​நிலை​யில், உயர் கல்வி நிறு​வனங்​கள் அடிப்​படை அங்​கீ​காரம் பெற வேண்​டும் என்​பதை நடை​முறைப்​படுத்​தப்பட ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அமைச்சர் பங்கேற்கவில்லை: விழா​வில் உயர் கல்வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், செயலர் சங்​கர் ஆகியோர் பங்​கேற்​க​வில்​லை. உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​.என்​.மஞ்​சுளா, ஆளுநரிடம் முனை​வர் பட்​டம் பெற்​றார்.

​விளை​யாட்​டுத் துறை​யில் முனை​வர் பட்ட ஆய்வு மேற்​கொண்ட அமைச்​சர் அன்​பில் மகேஸ், ஆளுநரிடம் பட்டம் பெறாமல், விழா முடிந்த பின்​னர் பல்​கலைக்​கழகத்​துக்​குச் சென்று முனை​வர் பட்​டத்​தைப் பெற்​றுக்கொண்​டார்​.

<div class="paragraphs"><p>திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், நாக் கமிட்டி இயக்குநர் ஜி.கண்ணபிரான். | படம்: எம்.மூர்த்தி |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in