தேசிய வரைகலை, கட்டுரை போட்டியில் வென்ற மதுரை மாணவி!

ச.சஸ்மிதா

ச.சஸ்மிதா

Updated on
1 min read

மதுரை: தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான வரைகலை, கட்டுரைப் போட்டியில் மதுரை மாணவி வென்றுள்ளார்.

இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான தேசிய அறக்கட்டளை (இன்டாக்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ‘டிரீ ஆஃப் லைஃப்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான வரைகலை, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் ஏதேனும் ஒரு பூர்வீக மரம், செடி, மலர் ஆகியவற்றை ஓவியமாக வரைய வேண்டும். 200 வார்த்தைகளுக்குள் கட்டுரையும் எழுத வேண்டும்.

இப்போட்டிக்கு நாடு முழுவதிலும் இருந்து 7 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பினர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு டெல்லியில் கல்விச் சுற்றுலாவும், பரிசுகளும் வழங்கப்படும்.

நடப்பாண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் முழுவதுமிருந்து பலர் பங்கேற்றனர். இதில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவி ச.சஸ்மிதா வென்றுள்ளார்.

<div class="paragraphs"><p>ச.சஸ்மிதா</p></div>
பழநி கோயில் நில மோசடி: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத் துறை, பத்திரப் பதிவு அதிகாரிகள் ஆஜர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in