சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் பணி​யில் உள்ள ஆசி​ரியர்​களுக்​கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடை​பெறவுள்ளது. இதை​யொட்டி தேர்​வெழுதவுள்ள ஆசி​ரியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​குவதற்கான வழிகாட்டு நெறி​முறைகள் வெளியாகி​யுள்​ளன.

அதன் விவரம்: இந்த பயிற்சி திட்​டம் முழு​வதும் நேரடி வகுப்​பு​கள் முறை​யில் மட்​டுமே நடத்​தப்​படும். இந்த வகுப்​பு​கள் ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் ஆசி​ரியர் பயிற்சி நிறு​வனங்​கள் அல்​லது முதன்​மைக் கல்வி அலு​வல​கம் ஆகிய​வற்​றில் ஏதேனும் ஒரு இடத்தில் பயிற்சி நடத்​தப்​படும்.

இதில் பங்​கேற்க விரும்​பும் ஆசி​ரியர்​கள் முன்​கூட்​டியே பதிவுசெய்து கொள்ள வேண்​டும். ஒரு மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆசி​ரியர்​கள் பிற மாவட்​டங்​களில் குறிப்​பிட்ட பயிற்சி வகுப்​பு​களுக்​கான இட​வசதி இருப்​பின், அங்கு நடை​பெறும் பயிற்சி வகுப்​பு​களி​லும் பங்கேற்கலாம். வழக்​க​மான பள்​ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்​படாதவாறு பங்கேற்க வேண்​டும்.

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்
சிறைக் கைதிகள் அடுத்தடுத்து தப்பியதன் எதிரொலி: 3 மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்

X