ஆங்கில பாடம் வினாத்தாள் கசிந்ததால் 1-ம் வகுப்பு மாணவர்கள் ஏமாற்றம்: மாற்று வினாத்தாள் வழங்க உத்தரவு

ஆங்கில பாடம் வினாத்தாள் கசிந்ததால் 1-ம் வகுப்பு மாணவர்கள் ஏமாற்றம்: மாற்று வினாத்தாள் வழங்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வு செப்.16-ம் தேதி தொடங்கியது. இதில் ஒன்றாம் வகுப்புக்கு ஆங்கில பாடத்தேர்வு நாளை (செப். 21) நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள் அந்தந்த பள்ளிகளுக்கு சீலிடப்பட்ட கவர்களில் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் 1-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆங்கில பாடத்துக்கு மீண்டும் புதிதாக வினாத்தாள் தயாரித்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு நாளை (செப். 21) அனுப்பி வைக்கப்பட உள்ளது. வினாத் தாள்களை பெற்றுக் கொண்டு அன்றைய தினமே தேர்வை நடத்தி முடிக்கவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒன்றாம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாள் வெளியானதாக தகவல் வந்தது. ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வை நடத்த உத்தர விட்டுள்ளோம்’’ என்றார்.

ஆங்கில பாடம் வினாத்தாள் கசிந்ததால் 1-ம் வகுப்பு மாணவர்கள் ஏமாற்றம்: மாற்று வினாத்தாள் வழங்க உத்தரவு
“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in