

கோப்புப் படம்
சென்னை: தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பவதாவது: அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகளும், சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீறி செயல்படும் பள்ளிகள் மீது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2023-ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் (தனியார் பள்ளிகள்) உரிய கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கும் உரிய அறிவுரை வழங்க வேண்டு்ம்.