பயோ டெக்னாலஜி படிப்புக்கு மே 17ல் கேட்-பி நுழைவுத் தேர்வு

பயோ டெக்னாலஜி படிப்புக்கு மே 17ல் கேட்-பி நுழைவுத் தேர்வு
Updated on
1 min read

முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கான நடப்பாண்டுக்கான கேட்-பி, பிஇடி நுழைவுத் தேர்வு மே 17ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.nic.in/gat-bet/ என்ற இணையதள வழியாக ஏப்.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட் டணமாக பொதுப் பிரிவுக்கு ரூ.1,300-ம், எஸ்சி/எஸ்டி பிரிவி னர் ரூ.650-ம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் ஏப்.11 முதல் 13ம் தேதி வரை மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www. nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

பயோ டெக்னாலஜி படிப்புக்கு மே 17ல் கேட்-பி நுழைவுத் தேர்வு
‘என்டிஏ’வுக்கு சேதாரமா? - ராமதாஸ், சசிகலா கூட்டணி ‘அஜெண்டா’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in