பொறியியல் சேர்க்கை 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை | கோப்புப் படம்
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நடப்பு கல்வி ஆண்டு பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு நடை​பெற்று வரு​கிறது.

சிறப்​புப் பிரி​வினருக்​கான கலந்​தாய்​வைத் தொடர்ந்​து, பொதுப்​பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்​தது. இதன்​மூலம் 28,550 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், 2-வது சுற்று கலந்​தாய்வு இன்று தொடங்​கு​கிறது. இக்​கலந்​தாய்​வுக்கு கட் ஆப் மதிப்​பெண் 171 முதல் 135.75 வரை பெற்​றுள்ள 93,117 மாணவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான கல்​லூரி மற்​றும் பாடப்​பிரிவை தேர்வு செய்​து​கொள்ள 5-ம் தேதி மாலை 5 மணி வரை அவ​காசம் அளிக்​கப்​படும். அதன்​பிறகு 7-ம் தேதி காலை 10 மணிக்கு அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​படும். அதை அவர்​கள் 8-ம் தேதி மாலை 5 மணிக்​குள் உறு​திப்​படுத்த வேண்​டும்.

உறுதி செய்த மாணவர் களுக்கு 9-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​படும் என தமிழ்நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் டி.புருஷோத்​தமன் தெரி​வித்​துள்​ளார்​.

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை | கோப்புப் படம்
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in