சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: சுதந்திர தினவிழாவை அனைத்து விதமான பள்ளிகளிலும் வரும் 15-ம் தேதி சிறந்த முறையில் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை விமர்சையாக நடத்த வேண்டும்.

இதுதவிர பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெறச் செய்ய வேண்டும். இதற்கு பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைக்கீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது. இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in