நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், அண்ணா பல்​கலைக்​கழக துறை கல்​லூரி​கள், உறுப்​புக் கல்​லூரி​கள், அண்​ணா​மலை பல்​கலைக்​கழகம் மற்​றும் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​களில் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் பிஇ, பிடெக் படிப்​பு​களில் நேரடி​யாக இரண்​டாம் ஆண்டு சேர்க்​கைக்கு (லேட்​ரல் என்ட்​ரி) தகு​தி​யான நபர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

இதற்கு பாலிடெக்​னிக் டிப்​ளமா படித்​தவர்​கள், பிஎஸ்சி பட்​ட​தா​ரி​கள் ஆன்​லைனில் (www.tnlea.com) விண்​ணப்​பிக்​கலாம். ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி ஆகும். கூடு​தல் விவரங்​களை மேலே குறிப்​பிடப்​பட்​டுள்ள இணை​யதளத்​தில் விரி​வாக அறிந்​து​கொள்​ளலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி தெரிவித்துள்​ளார்​.

நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சருக்கு இணையாக தவெக மாவட்ட செயலாளருக்கு இடம்: அதிகாரிகள் அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in