அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி அரசு, அரசு நிதி​யுதவி பெறும் மற்​றும் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் கீழ் செயல்​பட்டு வரும் அனைத்து அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களி​லும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் முதலாம் ஆண்​டு, நேரடி 2-ம் ஆண்டு (லேட்​ரல் என்ட்​ரி) மற்​றும் பகு​திநேர டிப்​ளமா படிப்பு மாணவர் சேர்க்​கைக்கு ஜூலை 31-ம் தேதிவரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என முன்பு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

மாணவர் சேர்க்​கையை அதி​கரிக்​கும் பொருட்டு அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் நேரடி மாணவர் சேர்க்கை (ஸ்​பாட் அட்​மிஷன்) ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

நேரடி சேர்க்​கையை பொறுத்​தவரை​யில் மாணவர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கத் தேவை​யில்​லை. தேவை​யான கல்​விச் சான்​றிதழ்​கள் மற்​றும் இதர ஆவணங்​களு​டன் தாங்​கள் சேர விரும்​பும் அரசு பாலிடெக்​னிக் கல்​லூரிக்கு நேரடி​யாகச் சென்று அங்கு உடனடி​யாக சேர்ந்​து​ கொள்​ளலாம் என்​பது குறிப்பிடத்தக்கது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in