இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு

இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்​வுக்​குரிய ஹால்​டிக்​கெட்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள், அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெற வேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அதன்​படி, வரும் கல்​வி​யாண்​டில் (2026-27) இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. இந்த தேர்​வெழுத சுமார் 15 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், தேர்வுக்​கான ஹால்​டிக்​கெட்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ எனும் இணை​யதளத்​தில் சென்று பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம். இது​சார்ந்த கூடு​தல் தகவல்​களை www.nta.ac.in என்ற என்​டிஏ இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் மாணவர்​கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது cuet-ug@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரிக்கு தொடர்​புக் கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு
விசிக ஆதரவை கோரிய விஜய்: “இடதுசாரிகள் முடிவை அறிந்து முடிவெடுப்போம்” - திருமாவளவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in