‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​முதுகலை பட்​டப்​படிப்​புக்​கான ‘கியூட்' நுழைவுத்​தேர்வு முடிவு​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள​தாக தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

மத்​திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​களில் முதுகலை பட்​டப்​படிப்பு மாணவர் சேர்க்​கைக்கு 'கியூட்' நுழைவுத்​தேர்வு (பிஜி) நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய கல்வி அமைச்​சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அந்த வகை​யில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான கியூட் (பிஜி) நுழைவுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 157 பாடப்​பிரிவு​களுக்கு கணினி வழி​யில் நடத்​தப்​பட்ட தேர்வை நாடு முழு​வதும் 3 லட்​சத்து 45 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் எழு​தினர்.

இந்​நிலை​யில் கியூட் நுழைவுத்​தேர்வு முடிவு​களை என்​டிஏ இணை​யதளத்​தில் (www.exams.nta.nic.in/ceut-pg) வெளி​யிடப்​பட்டு உள்​ளது. தேர்​வர்​கள் இணை​யதளத்​தில் தங்​கள் விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என என்​டிஏ அறி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in