

சென்னை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கே. ராஜசேகரன், கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் கூடுதல் இடங்களுக்கு 2027-2028-ம் கல்வி ஆண்டுக்கு புதிய மற்றும் தொடர் இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப் படிவத்தை இணையதளம் வழியாக உரிய கட்டணம் செலுத்தி அக். 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அபராத கட்டணம் செலுத்தி டிச. 10 வரை விண்ணப்பிக்கலாம்.