100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு

100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கு அனுப்​பிய சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 100 ஆண்​டு​களைக் கடந்து செயல்​பட்டு அரசுப் பள்​ளி​கள் பொது​மக்​களின் நம்​பிக்​கைக்கு உரிய​வை​யாக திகழ்​கின்​றன. இத்​தகைய பெரு​மைக்​குரிய அரசுப் பள்​ளி​களின் நூற்​றாண்டை கொண்​டாடு​வதன் வாயி​லாக மாணவர்​களுக்கு உத்​வேக​ம் ஏற்​படும்.

அதன்​படி நடப்புக் கல்​வி​யாண்​டில் (2025-26) 370 பள்​ளி​கள் நூற்​றாண்டை நிறைவுசெய்​துள்​ளன. இந்த பள்​ளி​களில் நூற்​றாண்டு திரு​விழாவை கொண்​டாட வேண்​டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்​டாட​மாறு பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கு, அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு
‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in