பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு

ஜனவரி 19-ம் தேதி நடக்கிறது
பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: பொங்​கல் பண்​டிகையன்று நடை​பெற​விருந்த சிஏ தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக ஐசிஏஐ நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இந்​திய பட்​டயக் கணக்​காளர் நிறு​வனம் (ஐசிஏஐ) சார்​பில் சிஏ எனும் பட்​டயக் கணக்​காளர் பணித்​தேர்வு ஆண்​டு​தோறும் ஜனவரி, மே மற்​றும் செப்​டம்​பர் மாதங்​களில் நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வு அடிப்​படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளாக நடத்​தப்​படு​கின்​றன. அதில் தேர்ச்சி பெறு​பவர்​கள் மட்​டுமே ஆடிட்​ட​ராக முடி​யும். அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான சிஏ தேர்​வு​கள் ஜனவரி​யில் நடை​பெறவுள்​ளன.

இதற்​கிடையே இடைநிலை தேர்​வில் குரூப்-2 பகு​தி​யானது ஜனவரி 15-ம் தேதி நடத்​தப்​படும் என்று முதலில் அறிவிக்​கப்​பட்​டது. அன்​றைய தினம் பொங்​கல் பண்​டிகை என்​ப​தால், சிஏ தேர்வு தேதியை மாற்ற வேண்​டுமென கோரிக்கை எழுந்​தது. இந்​நிலை​யில் ஜனவரி 15-ல் நடை​பெறு​வ​தாக இருந்த சிஏ தேர்வு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஐசிஏஐ நிறு​வனம் வெளி​யிட்ட அறி​விப்​பில், ``ம​கா​ராஷ்டிரா மாநிலத்​தில் ஜனவரி 15-ம் தேதி நகராட்​சித் தேர்​தல் நடை​பெற உள்​ளது. அதனால் அன்​றைய தினம் நடை​பெறு​வ​தாக இருந்த சிஏ தேர்​வு, நாடு முழு​வதும் ஜனவரி 19-ம் தேதி நடத்​தப்​படும். தேர்வு நேரத்​தில் எந்​த​வித மாற்​ற​மும் இல்​லை. மற்ற தேர்​வு​களும் திட்​ட​மிட்​டபடி நடை​பெறும்'' எனக் கூறப்​பட்​டுள்​ளது. ஆனால் ஐசிஏஐ அறி​விப்​பில் பொங்​கல் பண்​டிகை குறித்த தகவல் இடம்​பெறாதது தமிழர்​களிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு
“திமுக ஆட்சியில் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை” - இபிஎஸ் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in